tamilnadu

img

பாகிஸ்தானும் ஈத் பெருநாளுக்காக அணுகுண்டு வைத்திருக்கவில்லை...

ஸ்ரீநகர்:

பிரதமர் நரேந்திர மோடி, ராஜஸ்தான் மாநிலம் பார்மர் தொகுதியில் திங்களன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, பாகிஸ்தானின் எந்தவிதமான அச்சுறுத்தலுக்கும் இந்தியா இனிமேல் அஞ்சாது என்று கூறிய மோடி, “இந்தியா ஒன்றும் தனது அணு ஆயுதங்களை தீபாவளிக்கு வெடிப்பதற்காக வைத்திருக்கவில்லை” என்று யுத்தவெறியைக் கிளப்பினார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இது முதிர்ச்சியற்ற பேச்சு என்றும், ஒரு பிரதமர் இவ்வாறு பேசியிருக்கக் கூடாது என்றும் அவர்கள் கூறினர். தேர்தலுக்காக மோடி தரந்தாழ்ந்து பேசுவதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.இந்நிலையில், “இந்தியா, தீபாவளி கொண்டாடுவதற்காக அணுகுண்டு வைத்திருக்கவில்லை என்றால், பாகிஸ்தான் மட்டும் என்ன (ரம்ஜான் அல்லது பக்ரீத்) பெருநாள் கொண்டாடுவதற்காகவா அணுகுண்டு வைத்திருக்கிறது?” என்று பிரதமர் மோடிக்கு, காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, பதிலடி கொடுத்துள்ளார்.“பிரதமர் மோடி மிகவும் தாழ்ந்துப்போய் ஏன், இதுபோன்ற கீழ்த்தரமான அரசியல் பிரசங்கங்களை செய்கிறார்? என்பது தனக்கு தெரியவில்லை” என்றும் கூறியிருக்கும் மெகபூபா, “பிரதமர் மோடி தன்னை உண்மையான தேசபக்தர் என்று காட்டிக் கொள்வதற்காக - காந்தியின் இந்தியா இன்று ரத்தவெறி கொண்டு அலைகிறது- என்று பிறர் விமர்சனம் செய்யும் நிலைக்கு இந்தியாவின் மதிப்பை தரம் தாழ்த்தி விட்டார்” என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

;